உள்ளடக்கத்துக்குச் செல்

வைணு பாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைணு பாப்பு

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.

படிப்புப் பருவம்

[தொகு]

பள்ளிப்படிப்பின் போது அவரது மேடைப் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். கல்லூரியில் அறிவியல் குழுவைத் தொடங்கினார்; கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தார். 1943-இல் வைணு பாப்பு பயின்ற கல்லூரியில் சொற்பொழிவாற்ற ச. வெ. இராமன் வந்திருந்தார். அப்போது வைணு, தினமும் 16 மைல் சைக்கிளில் பயணித்து, ஒரு நாளும் தவறாது சொற்பொழிவைக் கேட்டாராம்! டென்னிசு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு விமான ஓட்டுநராக வேண்டுமென்ற விருப்பம் வைத்திருந்தார் வைணு.[1]

பிற விருப்பங்கள்

[தொகு]

வைணு பாப்பு ஒரு தொழில்முறை அல்லாத ஓவியர்; பழங்காப்பியங்களில் அதிகம் விருப்பம் கொண்டிருந்தவர். ஆங்கில, உருது கவிகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்த கவிஞர் மிர்சா காலிப். The Spirit of St Louis என்ற நூல் அவருக்கு மிகவும் பிடித்ததாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. arvindguptatoys.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணு_பாப்பு&oldid=4025388" இலிருந்து மீள்விக்கப்பட்டது